சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரியகருப்பன், அரசு ஒப்பந்ததாரரை புகழ்ந்து பேசியுள்ளதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்காலில் ரூ 77.16 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக நேற்று பூமி பூஜை நடந்தது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் புறவழிச்சாலை பணியினை தொடங்கி வைத்த பின் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், ``ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர்ச்சி பெற வேண்டுமென்றால், அடிப்படை கட்டமைப்பு அவசியம் தேவை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குகின்ற அரசாக தமிழக அரசு விளங்குகின்றது என்பதற்கு சான்றுதான் இந்த புறவழிச் சாலை அமைக்கும் பணி.

பெற்ற வளர்ச்சியைவிட கூடுதல் வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தினால்தான் புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்த நாளில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என ஒப்பந்ததாரர் மீனாட்சி சுந்தரம் விரும்பியதால், இன்று வேறு எங்கும் செல்லாமால் முதல் நிகழ்ச்சியாக நான் கலந்து கொண்டேன்.
ஒப்பந்ததாரர் மீனாட்சி சுந்தரத்தை நீண்ட காலமாக நன்கு அறிந்தவன், அவர் எடுக்கின்ற முயற்சிகளை நேர்த்தியாக அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கின்ற நன்மதிப்பை பெற்றவர். அவரது நிறுவனம் பல மாநிலங்களில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மதுரையில் வசிக்கும் உங்கள் காலடியில் நாங்கள்(சிவகங்கை) இருக்கிறோம். இந்த புறவழிச் சாலை பணியினையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டும்" என அங்கிருந்த ஒப்பந்ததாரர் மீனாட்சி சுந்தரத்தை பார்த்துப் பேச அவரும் எழுந்து வணங்கினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Tamilnadu News
0 Comments: