Team India: `வீரர்களின் ஜெர்சி... எல்லாவற்றிலும் காவி சேர்க்கிறார்கள்’ - மம்தா பானர்ஜி காட்டம் https://ift.tt/FJYb0Xg

``இந்திய கிரிக்கெட் வீரர்களைப் நினைத்து பெருமைக் கொள்கிறோம். மேலும் அவர்கள் உலக சாம்பியன் பட்டம் பெறுவார்கள் என நம்புகிறோம். ஆனால் அவர்கள் பயிற்சி செய்யும்போது, ​​காவி நிற ஜெர்சியை அணிகிறார்கள். வீரர்கள் நீல நிற ஜெர்சியை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது எல்லாவற்றிலும் காவி சேர்க்கிறார்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

போஸ்டாவில் நடைப்பெற்ற ஜகதாத்ரி பூஜையின் தொடக்க விழாவில் பேசிய அவர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு அவர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் அரசியல் ஆதாயத்திற்கு அந்த நிதியை பயன்படுத்தியதாக மத்திய அரசை தாக்கி பேசினார்.

மம்தா பானர்ஜி

``உங்களின் ஆதாயத்திற்காக மட்டுமே மொத்த பணத்தையும் விளம்பரம் செய்ய செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 100 நாள் பணியாளர்களின் ஊதியத்தை வழங்கிவில்லை. அந்த ஊதியம் வழங்கப்பட்டால் அந்த பயனாளிகளின் கண்ணீர் துடைக்கப்படும். ஆட்சி அதிகாரம் நிரந்தரமானது அல்ல. அவர்கள் செய்வது முழுவதும் தங்கள் சொந்த லாபத்திற்காகவும் ஆட்சி அதிகாரத்திற்காகவும் தான். ஆனால் ஆட்சி நிலைக்காது. கவிழ்ந்து விடும்" என்று மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார்.

மேலும், "மதங்கள் வேறுபாடு இல்லாமல் இந்தியாவின் அனைத்து மக்களின் மகிழ்ச்சிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். மதத்தின் அடிப்படையில் நான் எதையும் புதிதாக உருவாக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், "முன்பு மாயாவதி தனக்குத்தானே சிலைகளை வைத்துக் கொண்டார். ஆனால் வேறு யாரும் இதற்கு முன் இதை செய்யவில்லை. இப்போது இது போன்ற விஷயங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. என் பெற்றோர்கள் இறந்த பிறகு, மக்கள் என் பெற்றோரின் பெயரில் கல்வி நிறுவனங்களை உருவாக்க பரிந்துரைத்தனர். ஆனால் என் பெற்றோர்கள் விரும்பாத இந்த யோசனை எனக்கு பிடிக்கவில்லை. இந்த வகையில் தான் அவர்களை நினைவு கூறப்பட வேண்டும் என்றில்லை. ஆனால் அவர்கள் தாங்களே தங்கள் பெயர்களை சூட்டிக் கொள்கிறார்கள்.

நாட்டின் பெயரால் எதை செய்தாலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒருவர் என்றும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் குஜராத், உத்தரப்பிரதேசம் அல்லது தென்னிந்திய தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தினால் கூட எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை" என்று அவர் கூறினார்.

மேலும், முன்பு சிபிஎம் கட்சியுடன் போராடியதாகவும் இப்போது டெல்லியில் உள்ள கட்சியுடன் போராடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேற்கு வங்காளத்தில் அனைத்து பண்டிகளிலும் கொண்டாடப்படுவதாக கூறிய பானர்ஜி, "தனது பார்வையில் அனைத்து குடிமக்களும் சமம் என்பதால் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக பிரார்த்திப்பதாக கூறினார். மேற்கு வங்கம் நாட்டை வழிநடத்தப் போகிறது என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார்.



from Tamilnadu News

About Shabbir Ahmad :

Lorem ipsum dolor sit amet, pericula qualisque consequat ut qui, nam tollit equidem commune eu. Vel idque gloriatur ea, cibo eripuit ex.
View All Posts By Shabbir !

0 Comments:

All Rights Reserved. 2014 Copyright PICKER

Powered By Blogger | Published By Gooyaabi Templates Designed By : BloggerMotion

Top