மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில்தான் இடம்பெறும் என சில மாதங்களுக்கு முன்பே கமல்ஹாசன் உணர்த்திவிட்டாலும், அதிகாரப்பூர்வமாக கூட்டணி தொடர்பான எந்த முன் நகர்வும் இல்லை. இதனால் நிர்வாகிகளும் குழப்பமடைந்திருக்கிறார்கள். தி.மு.க-வுக்கும் ம.நீ.ம-வுக்கும் இடையில் என்ன நடக்கிறதென விசாரித்தோம்.

மக்கள் நீதி மய்யம் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கு மாற்று என கட்சி தொடங்கி, 2019, 2021 தேர்தல்களை சந்தித்திருந்தாலும் 2024-ல் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறது. கடந்த ஓராண்டாகவே தி.மு.க ஆட்சிமீதான விமர்சனங்களை தவிர்ப்பது, ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது என கூட்டணிக்கான அச்சாரமிட்டது மக்கள் நீதி மய்யம். ஆனால் அண்மை நாள்களாக தி.மு.க தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையே தொடங்கிவிட்டபோதும் மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணியை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் ``தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம,தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன. மேலும் ம.நீ.ம வருவது கூட்டணியை வலுப்படுத்தினாலும் தொகுதி பங்கீட்டில் அது தி.மு.க-வுக்கு சிக்கல்தான். இந்நிலையில் ஆரம்பத்தில் 3 தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்கலாம் என கருதியது மய்யம். 20219-ல் 3.5 சதவீதமும் 2021-ல் 2.9 சதவீதமும் பெற்ற எங்களுக்கு அதற்கான இடங்கள் கிடைக்க வேண்டும் என தங்களின் ஆசையை வெளிப்படுத்தினர்.

அதேபோல் தென்சென்னை அல்லது கோவை எம்.பி தொகுதியில் கமலை களமிறக்குவும் திட்டமிடபட்டது. ஆனால் தி.மு.க தரப்பிலோ கமல்ஹாசன் போட்டியிடும் பட்சத்தில் ஒரு தொகுதியை தரலாம் என கண் அசைத்தது. ஒரு தொகுதி பெற்றுக் கொள்வது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. குறைந்தது இரு தொகுதிகளையாவது வேண்டும் என கேட்டு பார்க்கிறார்கள். மய்யத்தார். அதனாலேயே தி.மு.க ம.நீ.ம கூட்டணி இறுதியாவதில் குழப்பம் நீடிக்கிறது” என்றனர்.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் சிலர் ``அண்மையில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டியிருந்தார் கமல். அப்போது கொள்ளை சார்ந்த கூட்டணி அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது,
மேலும் ஒரு தொகுதிக்குள் சுருங்குவது ஏற்புடையது அல்ல. இதனால் வரக்கூடிய தேர்தல்களிலும் குறைந்த இடங்களே கிடைக்கும். மேலும் ஒரு சீட்டுக்கு போய்விட்டார் கமல் என்ற விமர்சனம் கட்சியினரை சோர்வடைய செய்யும் எனப் பேசப்பட்டிருக்கிறது.
அந்த கூட்டம் முடிந்ததும் ``எங்கள் கொள்கைக்கேற்ற கூட்டணி அமைப்போம், நிலைமை கைகூடாத பட்சத்தில் தனித்து நிற்கவும் தயங்க மாட்டோம்`` என அறிவித்தது மய்யம். இந்த அறிவிப்பு `ஒரு தொகுதி போதாது` என தி.மு.க-வுக்கான மெசேஜாக பார்க்கப்பட்டது. ஆனால் என்ன தான் தனித்து நிற்போம் என மய்யம் டிமாண்ட் செய்தாலும் தி.மு.க அதன் நிலைப்பாட்டில் இருந்து மாற தயாராக இல்லை” என்றனர்.

இரண்டு சீட்டை லட்சியமாக கொண்டிருக்கிறது மய்யம். ஆனால் ஒரு சீட் என்கிறது தி.மு.க. இந்நிலையில் முடிவெடுக்க வேண்டியது மக்கள் நீதி மய்யம்தான். தி.மு.க-விடன் ஒரு சீட்டை பெறப் போகிறார்களா அல்லது வேறு பிளான் வைத்திருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Tamilnadu News
0 Comments: