`இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்' - அடுத்த மன்னர் குறித்த `Nostradamus’ கணிப்பு?! https://ift.tt/qhUDmGP

`இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்' - அடுத்த மன்னர் குறித்த `Nostradamus’ கணிப்பு?! https://ift.tt/qhUDmGP

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து, அரண்மனை நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், `விரிவடைந்த புரோஸ்டேட் சுரப்பி தொடர்பாக மன்னர் சார்லஸுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ செயல்முறையில், அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சை இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அதனால், பொதுவெளியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

அதேசமயம், இந்தக் காலகட்டத்தில் அரசு வணிகம் உள்ளிட்ட தனது வழக்கமான பணிகளையும் அவர் மேற்கொள்வர். தன்னுடைய சிகிச்சை பற்றி மன்னர் மிகவும் நேர்மறையாக இருக்கிறார். விரைவில் முழுமையாக பொதுப்பணிக்குத் திரும்புவார். உலகிலுள்ள அனைவருக்கும் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில், தனக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அவர் அறிவித்திருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், என்ன வகையான புற்றுநோய் பாதிப்பு என்று தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இங்கிலாந்து ராணியும், தன்னுடைய தாயுமான எலிசபெத் உயிரிழந்த பிறகு மன்னராகப் பதவியேற்று ஒன்றரை வருடம் ஆன நிலையில், சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மன்னர் பதவியிலிருந்து ஒருவேளை அவர் விலகும் பட்சத்தில் அடுத்த மன்னர் யார் என்ற விவகாரம் தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், நோஸ்ராடாமஸ் என்று அழைக்கப்படும் மைக்கேல் டி நோஸ்திரதாம் என்பவர் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவை என்று கணித்து எழுதிவைத்த புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் சம்பவம், இங்கிலாந்தின் தற்போதைய மன்னர் சார்லஸைக் குறிப்பதாக ஜோதிடர்கள் சிலர் கூறுவது பேசுபொருளாகியிருக்கிறது.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - இளவரசர் ஹாரி

அதாவது நோஸ்ராடாமஸின் புத்தகத்தில், `தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து அபகரிக்கப்படுவார்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில், தீவுகளின் மன்னர் என்பது சார்லஸைக் குறிப்பதாகவும், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவர் என்பது ஹாரியைக் குறிப்பிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

மைக்கேல் டி நோஸ்திரதாம் (Michel de Nostredame), சுருக்கமாக நோஸ்திரதாமுஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் நபர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்குகிறார். இப்படைப்பு 1555 -ம் ஆண்டில் முதலில் அச்சடிக்கப்பட்டது என்கிறார்கள். இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ், இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார்.

இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Tamilnadu News

வேகமெடுக்கும் தாராவி திட்டம்; மக்களை உப்பள நிலத்துக்கு மாற்றும் அதானி நிறுவனம் - நடப்பது என்ன?! https://ift.tt/BzY1a03

வேகமெடுக்கும் தாராவி திட்டம்; மக்களை உப்பள நிலத்துக்கு மாற்றும் அதானி நிறுவனம் - நடப்பது என்ன?! https://ift.tt/BzY1a03

மும்பை தாராவியில் உள்ள குடிசைகளை இடித்துவிட்டு அதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் இருந்த இத்திட்டம் இப்போது விரைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு டெண்டர் விட்டு இருந்தது. இதில் அதானி நிறுவனம் வெற்றி பெற்று பணியை பெற்றுள்ளது. தாராவியில் வசிக்கும் தகுதியான குடிசைவாசிகளுக்கு 360 சதுர அடியில் இலவச வீடுகள் தாராவியேயே கொடுக்கப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்காக தாராவியில் உள்ள குடிசைகள் மீண்டும் கணக்கெடுக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட இருக்கிறது. தாராவியில் ஆயிரக்கணக்கான குடிசைகள் இலவச வீடு பெற தகுதியற்றதாக இருக்கிறது.

முலுண்ட் மக்கள் போராட்டம்

அது போன்ற குடிசைவாசிகளுக்கு வாடகை வீடு திட்டத்தின் கீழ் மும்பைக்கு வெளியில் வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச வீடு பெற தகுதியில்லாத குடிசைவாசிகளுக்கு அதானி நிறுவனம் வீடு கொடுக்கும். ஆனால் அதற்கான கட்டுமானச் செலவை குடிசைவாசிகள் கொடுக்கவேண்டும். அவர்களுக்காக புதிய தாராவி உருவாக்கப்பட இருக்கிறது. மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியில் இருக்கும் முலுண்ட் பகுதியில் இந்த புதிய தாராவி உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால் தாராவி மக்களை முலுண்டிற்கு மாற்ற அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தாராவி மக்களை முலுண்ட் கொண்டு வந்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிழக்கு புறநகரில் காஞ்சூர்மார்க் பகுதியில் இருக்கும் உப்பள நிலம் 200 ஏக்கர், முலுண்ட் பகுதியில் உள்ள உப்பள நிலம் 58 ஏக்கர் மற்றும் வடாலாவில் உள்ள 28 ஏக்கர் உப்பள நிலத்தில் தாராவி மக்களுக்கு வீடு கட்டப்பட இருக்கிறது. இது தொடர்பான திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. உப்பள நிலத்தின் பெரும்பகுதி மத்திய அரசுக்கு சொந்தமானது ஆகும்.

எனவே இந்த நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வழக்கமாக 30 ஆண்டுகளுக்குத்தான் நிலம் குத்தகைக்கு கொடுப்பது வழக்கம். ஆனால் மத்திய அரசிடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கும்படி கேட்டுள்ளது. அந்த நிலத்தை தாராவி குடிசை புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் அதானி நிறுவனம் விலை கொடுத்து வாங்க வாங்க வேண்டும். முலுண்ட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 46 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை தாராவி திட்டத்திற்கு மாற்றிக்கொடுக்கும்படி மாநில அரசு மாநகராட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாராவி

முலுண்ட் ஆக்ராய் நாக்கா பகுதியிலும் 18 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதனையும் தாராவி திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது. தாராவியில் 3 லட்சம் குடிசைகள் இலவச வீடு பெற தகுதியற்றதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தாராவியில் இருந்து வேறு இடத்திற்கு குறிப்பாக உப்பள நிலத்திற்கு மாற்ற அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தாராவி அருகில் உள்ள ரயில் நிலத்தில் தற்காலிக குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது. அதேசமயம் அதானி நிறுவனத்திற்கு மாநில அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Tamilnadu News

"இந்து முன்னணி... ஒரு காலத்தில் மரியாதை இருந்தது; இப்போது மோசமாகிவிட்டது" - உயர் நீதிமன்ற நீதிபதி https://ift.tt/zX8RD2b

"இந்து முன்னணி... ஒரு காலத்தில் மரியாதை இருந்தது; இப்போது மோசமாகிவிட்டது" - உயர் நீதிமன்ற நீதிபதி https://ift.tt/zX8RD2b

கடந்த ஜனவரி 7-ம் தேதி இரவு தஞ்சாவூர் ரயில்வே காவல்துறையினர் குடியிருப்பு அருகே ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் பெண் போலீஸ் ரோந்து சென்றபோது, குபேந்திரன், முத்தமிழ்செல்வன், ரவி ஆகியோர் கோயிலில் விளக்கேற்றும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

மது

`கோயில் பகுதியில் மது அருந்தக்கூடாது, எழுந்து செல்லுங்கள்’ என்று அவர்களிடம் பெண் காவலர் ஆதிநாயகி கூறியுள்ளார். அதற்கு அவர்கள், "நாங்கள் இந்து முன்னணியில் பெரிய பொறுப்பில் உள்ளோம், இங்கிருந்து செல்ல முடியாது" எனக்கூறி பெண் போலீஸை ஆபசமான வார்த்தைகளில் திட்டியது மட்டுமின்றி, ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்பு ஆட்களை திரட்டி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸார் அங்கு சென்று, பெண் போலீசிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டு பிரச்சனை செய்த குபேந்திரன், முத்தமிழ்செல்வன், ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை

ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இந்து முன்னணி நிர்வாகி குபேந்திரன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், "ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸை குடிபோதையில் கெட்ட வார்த்தைகளால் திட்டி, மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். இவர் மீது வேறு சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிட்டார்.

ஜாமீன் மனு

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, "ஏற்கனவே ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

சமூகத்தில் இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு மோசமாகி விட்டது. மேலும், மனுதாரர் நடந்து கொண்டவிதம் ஏற்க்கதக்தல்ல" எனக் கூறி குபேந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Tamilnadu News

"பழனிசாமி தண்டனை அனுபவிப்பார்; ஜெயக்குமார் தமிழகத்துக்குள் நடமாட முடியாது" - காட்டமான ஓ.பி.எஸ் https://ift.tt/dLFlOom

"பழனிசாமி தண்டனை அனுபவிப்பார்; ஜெயக்குமார் தமிழகத்துக்குள் நடமாட முடியாது" - காட்டமான ஓ.பி.எஸ் https://ift.tt/dLFlOom

ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

ஓ.பி.எஸ்

இக்கூட்டத்தில் பேசிய ஒ.பி.எஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக அழிந்து விடக்கூடாது என நினைத்து எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, நாய் வாலை நிமிர்த்த முடியுமா? இணைந்து செல்ல சம்மதிக்கவில்லை.

ஒ.பி.எஸ் கைய்யொப்பமிட்ட ஏ மற்றும் பி பார்ம் மூலம்தான் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் எம்.எல்.ஏ க்களாக வெற்றி பெற்றனர், ஒ.பி.எஸ்ஸால் வெற்றி பெற்ற 4 பேருக்கும் மானம், ரோஷம் இருந்தால் ராஜினாமா செய்வார்களா?

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உடைத்து அழிக்க நினைக்கிறார், அந்த சர்வாதிகாரியை ஒழிக்கும் வரை நாம் கடுமையாக போராட வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி அணியினரை தோற்கடிக்க பாடுபட வேண்டும்" என்று பேசினார்

எடப்பாடி, ஓபிஎஸ் 

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது "ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒ.பி.எஸ் மட்டுமே கட்சி, ஆட்சிக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை எற்க என்ன அவசரம்? அவர் என்ன, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவா? கூட்டணிக்கு யாராவது வருவார்களா என எடப்பாடி பழனிசாமி கடை விரித்து உட்கார்ந்து இருக்கிறார், அவர் பின்னால் இருப்பவர்களில் யாருக்கும் முதுகெலும்பு இல்லை" என்றார்.

ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது,  "தேர்தல் மூலமாகவே அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் கட்சி விதிகளை கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி எனும் சர்வாதிகாரி போலியான பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதிகளை எடப்பாடி பழனிசாமி காலில் போட்டு மிதித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமியை தேர்தலிலிருந்து ஓட ஓட விரட்டி அடிப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சின்னம்மா,  ஊர்ந்து ஊர்ந்து சென்றுதான் முதல்வர் ஆனார்.

அதிமுகவுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன தியாகம் செய்தார்? அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றரை கோடி தொண்டர்கள் ஏகமனதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது.

ஜெயலலிதா சொல்லும் சொல்லை மீறாத தொண்டனாக அதிமுக-வில் இருந்துள்ளேன். ஒரு தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்த பின்னர் 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது,

வழிகாட்டும் குழுவில் முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை, தான்தோன்றித்தனமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும், ராஜினாமா செய்யவில்லையென்றால் தொண்டர்கள் தூக்கி எறிவார்கள். எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்காக தண்டனை அனுபவிப்பார், ஜெயக்குமார் நாவை அடக்கி பேச வேண்டும், அப்படி இல்லையென்றால் தமிழகத்துக்குள் எங்கும் நடமாட முடியாது.

இபிஎஸ், ஓபிஎஸ்

நாடாளும்மன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க போராடி வருகிறோம், நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானது, நிரந்தர தீர்ப்புகள் வரவில்லை, நிலைமையை புரிந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாக்கப்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Tamilnadu News

Election 2024: `இரண்டு லட்சியம்; ஒன்று நிச்சயம்..!’ திமுக - மநீம உறவில் நடப்பது என்ன?! https://ift.tt/Aa4Dudc

Election 2024: `இரண்டு லட்சியம்; ஒன்று நிச்சயம்..!’ திமுக - மநீம உறவில் நடப்பது என்ன?! https://ift.tt/Aa4Dudc

மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில்தான் இடம்பெறும் என சில மாதங்களுக்கு முன்பே கமல்ஹாசன் உணர்த்திவிட்டாலும், அதிகாரப்பூர்வமாக கூட்டணி தொடர்பான எந்த முன் நகர்வும் இல்லை. இதனால் நிர்வாகிகளும் குழப்பமடைந்திருக்கிறார்கள். தி.மு.க-வுக்கும் ம.நீ.ம-வுக்கும் இடையில் என்ன நடக்கிறதென விசாரித்தோம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கு மாற்று என கட்சி தொடங்கி, 2019, 2021 தேர்தல்களை சந்தித்திருந்தாலும் 2024-ல் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறது. கடந்த ஓராண்டாகவே தி.மு.க ஆட்சிமீதான விமர்சனங்களை தவிர்ப்பது, ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது என கூட்டணிக்கான அச்சாரமிட்டது மக்கள் நீதி மய்யம். ஆனால் அண்மை நாள்களாக தி.மு.க தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையே தொடங்கிவிட்டபோதும் மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணியை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் ``தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம,தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன. மேலும் ம.நீ.ம வருவது கூட்டணியை வலுப்படுத்தினாலும் தொகுதி பங்கீட்டில் அது தி.மு.க-வுக்கு சிக்கல்தான். இந்நிலையில் ஆரம்பத்தில் 3 தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்கலாம் என கருதியது மய்யம். 20219-ல் 3.5 சதவீதமும் 2021-ல் 2.9 சதவீதமும் பெற்ற எங்களுக்கு அதற்கான இடங்கள் கிடைக்க வேண்டும் என தங்களின் ஆசையை வெளிப்படுத்தினர்.

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள்

அதேபோல் தென்சென்னை அல்லது கோவை எம்.பி தொகுதியில் கமலை களமிறக்குவும் திட்டமிடபட்டது. ஆனால் தி.மு.க தரப்பிலோ கமல்ஹாசன் போட்டியிடும் பட்சத்தில் ஒரு தொகுதியை தரலாம் என கண் அசைத்தது. ஒரு தொகுதி பெற்றுக் கொள்வது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. குறைந்தது இரு தொகுதிகளையாவது வேண்டும் என கேட்டு பார்க்கிறார்கள். மய்யத்தார். அதனாலேயே தி.மு.க ம.நீ.ம கூட்டணி இறுதியாவதில் குழப்பம் நீடிக்கிறது” என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் சிலர் ``அண்மையில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டியிருந்தார் கமல். அப்போது கொள்ளை சார்ந்த கூட்டணி அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது,

மேலும் ஒரு தொகுதிக்குள் சுருங்குவது ஏற்புடையது அல்ல. இதனால் வரக்கூடிய தேர்தல்களிலும் குறைந்த இடங்களே கிடைக்கும். மேலும் ஒரு சீட்டுக்கு போய்விட்டார் கமல் என்ற விமர்சனம் கட்சியினரை சோர்வடைய செய்யும் எனப் பேசப்பட்டிருக்கிறது.

அந்த கூட்டம் முடிந்ததும் ``எங்கள் கொள்கைக்கேற்ற கூட்டணி அமைப்போம், நிலைமை கைகூடாத பட்சத்தில் தனித்து நிற்கவும் தயங்க மாட்டோம்`` என அறிவித்தது மய்யம். இந்த அறிவிப்பு `ஒரு தொகுதி போதாது` என தி.மு.க-வுக்கான மெசேஜாக பார்க்கப்பட்டது. ஆனால் என்ன தான் தனித்து நிற்போம் என மய்யம் டிமாண்ட் செய்தாலும் தி.மு.க அதன் நிலைப்பாட்டில் இருந்து மாற தயாராக இல்லை” என்றனர்.

கமல், ஸ்டாலின்

இரண்டு சீட்டை லட்சியமாக கொண்டிருக்கிறது மய்யம். ஆனால் ஒரு சீட் என்கிறது தி.மு.க. இந்நிலையில் முடிவெடுக்க வேண்டியது மக்கள் நீதி மய்யம்தான். தி.மு.க-விடன் ஒரு சீட்டை பெறப் போகிறார்களா அல்லது வேறு பிளான் வைத்திருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Tamilnadu News

``ராகுல் காந்தி வரவேண்டாமா..?” - அரசு நிகழ்ச்சியில் ஆதரவு கேட்ட அனிதா ராதாகிருஷ்ணன் https://ift.tt/QVB48DM

``ராகுல் காந்தி வரவேண்டாமா..?” - அரசு நிகழ்ச்சியில் ஆதரவு கேட்ட அனிதா ராதாகிருஷ்ணன் https://ift.tt/QVB48DM

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்  நடைபெற்றது.  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர்  முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  கலந்து கொண்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அடசு விழாவில் தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் அனிதா ஆதாகிருஷ்ண

அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லையே என்ற பல்வேறு கருத்துகள் எங்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றது. எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். அந்த வகையில் உங்களின் மீனவ சகோதரனாக நான் சொல்லுவது என்னவென்றால், டெல்லியில் உங்கள் குரல் ஒலிக்கின்ற வகையில் முதல்வரிடம் பேசி ராஜ்ய சபாவை வாங்கித்தருவேன் என உங்களுடைய சகோதரனாக சொல்லிக்கொள்கிறேன். மீனவர்கள் நலனை காக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

ராமநாதபுரத்தில் மீனவர்கள் மாநாட்டை நடத்தி அவர்களின் பத்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த அரசு மீனவர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே நாட்டின் நிலைகளை நம்முடைய பங்கு தந்தைகள் சற்று நினைத்துபார்க்க வேண்டும். என்ன நடந்தால் சரியாக வரும் என்பதை யோசனைசெய்து பார்க்கவேண்டும். உங்களுக்கு அரசியலில் பங்குபெறுகின்ற வகையில் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிப்பதகாக அந்த பதவியை பெற்றுத்தருவதற்கான பணிகளை, அதிலும் நீங்கள் தருகின்ற அந்த நபருக்கு பதவியை பெற்றுத்தருகின்ற பணியை நான் செய்துதருவேன் என்பதை மீன்வளத்துறை அமைச்சர் என்றவகையில் சொல்லிக்கொள்கிறேன்.

அமைச்ச அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளும், பாதிப்புகளும் எனக்கு நன்றாக தெரியும். இரண்டு நாள்களுக்கு முன்பு பங்குதந்தையர்கள் மீட்டிங் போட்டதாக சொன்னார்கள். எனவே வர இருக்கின்ற காலத்தில் எதையும் மனதில் வைக்காமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல், நம்மையெல்லாம்  பிரித்தாள நினைக்கின்றவர்களை ஒதுக்கிவிட்டு யார் வரவேண்டும், யார் மேலே இருக்கவேண்டும் என நினையுங்கள். ராகுல் காந்தி வரவேண்டாமா. இந்தியா கூட்டணி வெல்ல வேண்டாமா. எனவே உங்களையெல்லாம் கைகூப்பி கேட்கின்றேன், எங்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கின்றோம். நம் நாடாளுமன்ற உறுபினர் உங்களுக்காகவும் குரல் கொடுப்பார், உங்கள் பிரச்னைக்காகவும் குரல் கொடுப்பார்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Tamilnadu News

அட்டைப்படம் https://ift.tt/LvJXCtj

அட்டைப்படம் https://ift.tt/LvJXCtj



from Tamilnadu News

All Rights Reserved. 2014 Copyright PICKER

Powered By Blogger | Published By Gooyaabi Templates Designed By : BloggerMotion

Top