திருச்சி பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா, ``நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அவை யாருக்கு எதிராகப் பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது எனத் தெரியவேண்டும். தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்... தமிழக காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகள், பாரபட்ச செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. தமிழக காவல்துறை பா.ஜ.க-வினரை குறிவைத்து வழக்கு பதிவுசெய்கிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு, 30 ஆண்டுகள் பழைமையான கோயிலை இடித்துள்ளார்கள். ஆளும் தி.மு.க அரசு, இந்து மத விரோத அரசாகச் செயல்படுகிறது. எனவே, தமிழக அரசு இந்து விரோதப் போக்கை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். துப்பாக்கி, வெடிப்பொருட்கள் என வைத்திருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடமிருந்து அவற்றை கைப்பற்றி, என்.ஐ.ஏ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. எதிர்காலத்தில் பா.ஜ.க தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். 'ஆளுநர் பதவி தேவையா?' என கூறும் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர், எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுநர் இல்ல வாசலிலேயே இருப்பார்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் ஆளுநர் பதவி வேண்டும் என மாற்றிப் பேசுவார்கள்.

தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரிப்பதற்கு சில சக்திகள் ஆயுத கடத்தலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பெரிய பயங்கரவாத அமைப்புகளை கட்டமைத்து வருகிறார்கள். தமிழகத்தில் தேசிய நடவடிக்கைகள் கட்டமைக்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் துவக்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். அவர், தற்போது சோதனை காலகட்டத்தில் உள்ளார். தேர்தல் செயல்பாடுகளுக்குப் பிறகே அவரது நிலை புரியவரும்" என்றார்.
from Tamilnadu News
0 Comments: